பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர், பிச்சை எடுத்து சாப்பிடுவதை தவிர வடிவேலுவுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது வடிவேலு தான். அந்த அளவிற்கு அவருடைய நகைச்சுவைகள் மிகவும் எதார்த்தமானதாகவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கும். இருப்பினும் சமீப காலமாக வடிவேலுவிற்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. மாமன்னன் திரைப்படத்திற்கு மாரீசன், கேங்கர்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார் வடிவேலு. அதிலும் கேங்கர்ஸ் திரைப்படத்தில் மீண்டும் காமெடியனாக களம் இறங்கியுள்ளார். எனவே இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரபல கவர்ச்சி நடிகை சோனா, சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை தாக்கி பேசியுள்ளார்.
அதாவது பூவெல்லாம் உன் வாசம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனா. அதைத்தொடர்ந்து இவர் ஷாஜகான், சிவப்பதிகாரம், மிருகம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் குசேலன், அழகர் மலை ஆகிய படங்களில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் வடிவேலு குறித்து பேசிய போது, “வடிவேலுவை பற்றி பேசுவதற்கு அவர் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. அவரைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. அவருடன் ஜோடியாக நடித்ததற்கு பிறகு 16 படங்களில் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அனைத்திற்கும் நோ சொல்லிவிட்டேன். பிச்சை எடுத்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேன் தவிர வடிவேலுவுடன் இணைந்து நடிக்கவே மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த ஒரு சில நடிகைகள், வடிவேலு தனக்கு தொல்லை கொடுப்பார் என்று பல இடங்களில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.