Homeசெய்திகள்சினிமாஇரண்டு மகள்களுடன் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

இரண்டு மகள்களுடன் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

-

- Advertisement -

இரண்டு மகள்களுடன் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் தனது இரண்டு மகள்களுடன் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஜெர்மனி நாட்டில் பிறந்த கிறிஸ்டியன் ஆலிவர் 51 வயது நிரம்பியவர். இவர் 10 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகள்களான மேடிடா, அனிக் ஆகியோருடன் விமானத்தில் பயணித்தார். இவர் பயணித்த சிறிய விமானமானது F Mitchell விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. அதை தொடர்ந்து கரீபியன் தீவில் இருக்கும் சென்ட் வென்சென்ட் தீவின் இந்தியாவின் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிறிஸ்டியன் ஆலிவர், தனது இரு மகள்களுடன் உயிரிழந்தார். மேலும் விமானியும் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இரண்டு மகள்களுடன் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ்டியன் ஆலிவர் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர். கடந்த 1995இல் வெளியான Saved by the Bell : The New class என்ற நாடகத்தில் முதல்முறையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து Dial Of Destiny போன்ற படத்திலும் Law & Order போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரின் இறப்புச் செய்தி பல்வேறு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ