அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 63வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது வருகின்ற ஏப்ரல் 10 என்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அஜித் ரசிகர்களும் இந்த டீசரை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் வில்லனாக நடிக்கும் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை பிரியா வாரியர் நடிப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவருக்குமான பாடல் ஒன்று படத்தில் இருப்பதாகவும், அது 90s கிட்ஸ்களின் ஹிட் பாடலான ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.