Homeசெய்திகள்சினிமா'ரெட்ரோ' படத்தின் கதை இதுதான்.... பிரபல தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

‘ரெட்ரோ’ படத்தின் கதை இதுதான்…. பிரபல தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

ரெட்ரோ படத்தின் கதை குறித்து பிரபல தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.'ரெட்ரோ' படத்தின் கதை இதுதான்.... பிரபல தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

சூர்யாவின் 44 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருக்கிறார். இதில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் 2D நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படம் காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. அதன்படி ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அடுத்தது வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ரெட்ரோ' படத்தின் கதை இதுதான்.... பிரபல தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி அவர், “காதலுக்காகவும் குடும்பத்திற்காகவும் ஹீரோ எல்லாத்தையும் விட்டுட்டு வருகிறார். ஆனால் அவருடைய கடந்த காலம் அவரை விடாமல் துரத்துகிறது. இப்படி எல்லாமே அவரை இழுக்கும்போது ஹீரோ என்ன பண்ணுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் மாஸ் மற்றும் கிளாஸ் இருக்கிறது. இது சென்ஸிபிலான கமர்சியல் படமாக உருவாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ