தனுஷ் ஆசைப்பட்டாலும் அஜித்தை இயக்க முடியாது என பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அதுமட்டுமில்லாமல் இவர் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். இதற்கிடையில் இவர் கடந்த 2017-ல் பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கி பெயரையும், புகழையும் பெற்றுள்ளார். தற்போது இவர் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். மேலும் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
அடுத்தது ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, மாரி செல்வராஜ் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் பெரிய ஹீரோக்களின் படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். இவ்வாறு ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனராகவும், பாடகராகவும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ், அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேட்டி ஒன்றில், தனுஷ் – அஜித் படம் குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியிருந்தார்.
ஆனால் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தனுஷ் ஆசைப்பட்டாலும் அஜித்தை இயக்க முடியாது என்று கூறி இருக்கிறார். அதாவது “தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகவும் டிமாண்டான நடிகர். அவர் படு பிஸியாக இருக்கும் காரணத்தால் ஒரு வருடம் கால் ஷீட் ஒதுக்கி அஜித் படத்தை எப்படி அவரால் இயக்க முடியும். அவர் அந்த படத்தை பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் நடைமுறைப்படி அது சாத்தியமாகுமா? என்ற கேள்விகள் நிறைய இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இவர் கூறியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.