Homeசெய்திகள்சினிமாதமிழ்நாட்டில் முதல் 5 நாட்களில் 100 கோடியை அள்ளும்.... 'குட் பேட் அக்லி' குறித்து பிரபல தயாரிப்பாளர்!

தமிழ்நாட்டில் முதல் 5 நாட்களில் 100 கோடியை அள்ளும்…. ‘குட் பேட் அக்லி’ குறித்து பிரபல தயாரிப்பாளர்!

-

- Advertisement -

அஜித்தின் 63வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் முதல் 5 நாட்களில் 100 கோடியை அள்ளும்.... 'குட் பேட் அக்லி' குறித்து பிரபல தயாரிப்பாளர்!இப்படமானது அப்பா- மகன் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தில் தரமான சம்பவம் செய்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டீசர் மற்றும் ட்ரெய்லரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளிலும் அஜித்தை வேற லெவலில் செதுக்கியிருந்தார்.தமிழ்நாட்டில் முதல் 5 நாட்களில் 100 கோடியை அள்ளும்.... 'குட் பேட் அக்லி' குறித்து பிரபல தயாரிப்பாளர்! எனவே ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்குகளில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் குட் பேட் அக்லி படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 30 கோடியை அள்ளிவிடும் என்று நம்புகிறார்கள். ஆன்லைன் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இந்த படம் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் 5 நாட்களில் 100 கோடியை அள்ளும்.... 'குட் பேட் அக்லி' குறித்து பிரபல தயாரிப்பாளர்!அதே சமயம் தொடர் விடுமுறை நாட்கள் இருப்பதாலும் இந்த படம் அதிக வசூல் செய்யும். கடந்த ஆண்டு இந்த ஆண்டில் நாம் பார்த்த படங்களிலேயே குட் பேட் அக்லி முதல் 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடியை தாண்டி விடும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. அப்படிப்பட்ட சாதனையை இப்படம் படைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ