பிரபல தயாரிப்பாளர் வீர தீர சூரன் – பாகம் 2 படம் குறித்து தனது முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
விக்ரமின் 62 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன்- 2. இந்த படத்தினை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை தேனி ஈஸ்வர் கவனித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருக்கிறார். ராவான கல்ட் – கமர்சியல் படமாக உருவாகியுள்ள இந்த படமானது வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் படக்குழுவினரும் இப்படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் அருண்குமாரின் புதிய முயற்சியும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாகும். அதாவது பொதுவாகவே சினிமாவில் எந்த ஒரு படமும் முதல் பாகம் வெளியான பின்னர்தான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால் அருண்குமாரை பொறுத்தவரை அவர் முதலிலேயே இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார். அருண்குமாரின் வித்தியாசமான இந்த முயற்சி பாராட்டுக்ககுரியது. இருப்பினும் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் இந்த படம், கதையை எப்படி நகர்த்தி கொண்டு செல்லும், அடுத்த பாகத்திற்கு எப்படி பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆதலால் திரையரங்குகளில் இப்படத்தை காண ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Remember the name S U Arunkumar!
*Not a promotional tweet*— arun Viswa (@iamarunviswa) March 24, 2025
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருண் விஷ்வா தனது எக்ஸ் தள பக்கத்தில், “எஸ்.யு. அருண்குமார் என்ற பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது விளம்பரத்திற்காக போடப்பட்ட ட்வீட் அல்ல” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.