Homeசெய்திகள்சினிமாநான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்.... பிரபல சின்னத்திரை நடிகை பேட்டி!

நான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்…. பிரபல சின்னத்திரை நடிகை பேட்டி!

-

பிரபல சின்னத்திரை நடிகை, தான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன் என பேட்டி அளித்துள்ளார்.நான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்.... பிரபல சின்னத்திரை நடிகை பேட்டி!

சின்னத்திரை நடிகை ஆலியா மானஷா, ராஜா ராணி, இனியா ஆகிய மெகா தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதற்கிடையில் இவர் ராஜா ராணி சீரியலில் பணியாற்றியபோது அதே தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அய்லா என்ற மகளும் அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர். மேலும் ஆலியா மானஷா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் இவர் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆலியாவிடம் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. நான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்.... பிரபல சின்னத்திரை நடிகை பேட்டி!அதற்கு அவர், “நான் அவருக்கு தான் ஓட்டு போடுவேன்” என்று கூறினார். தொடர்ந்து விஜயின் அரசியல் கட்சி பிரச்சாரத்தில் ஈடுபடுவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஷூட்டிங், ஃபேமிலி ஆகியவற்றிலேயே தன்னுடைய முழு நேரம் செலவாகிறது என்றும் பிரச்சாரத்தில் பங்கேற்பானா என்பது பற்றி தெரியவில்லை என்றும் கூறியவர் மீண்டும் தான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன் என்று கூறியுள்ளார்.

MUST READ