Homeசெய்திகள்சினிமாமஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பிரபல தமிழ் நடிகர்!

மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பிரபல தமிழ் நடிகர்!

-

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான படம் மஞ்சுமெல் பாய்ஸ். இத்திரைப்படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரிலீஸ் ஆகி தற்போது திரையரங்குகளில் மக்கள் கூட்டத்தை அலைமோத வைத்துள்ளது. கொடைக்கானலில் பிரபல சுற்றுலாத் தளமான குணா குகைக்கு செல்லும் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் ஆழமான பள்ளத்தில் மாட்டிக் கொள்கிறார். மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பிரபல தமிழ் நடிகர்!அவரை காப்பாற்றும் பிற நண்பர்கள் செய்யும் எமோஷனலான விஷயங்கள் தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் கதை. பெரிய நட்சத்திர பட்டாளங்கள் ஏதுமின்றி இப்படம் வெளியாகி இருந்ததால் மிகப்பெரிய அளவில் படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் படம் வெளியான பின்பு பார்வையாளர்களின் பாசிட்டிவ் ரிவ்யூ சுனாமி வேகத்தில் பரவி சினிமா ரசிகர்களை திரையரங்குகளுக்கு படையெடுக்க வைத்தது. கமல்ஹாசன், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் போன்ற திரைப்பிரபலங்கள் பலரும் இத்திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். அதன்படி இந்த படத்திற்கு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் 100 கோடியை தாண்டி இத்திரைப்படம் வசூலித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பேராதரவு கிடைத்துள்ள நிலையில் இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்திற்காக அட்வான்ஸ் பெற்று இருப்பதாக தகவல் கசிந்திருந்தது. தற்போது சிதம்பரம் குறித்த மற்றொரு புதிய தகவலும் வெளியாகி உள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பிரபல தமிழ் நடிகர்!அதாவது பிரபல நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரம். ஏற்கனவே மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில் தனுஷ் நடிப்பில் சிதம்பரம் இயக்கவுள்ள புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தை மதுரை அன்பு தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ