Homeசெய்திகள்சினிமாபிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் அல வைகுண்டபுரமுலு, புஷ்பா ஆகிய வெற்றி படங்களில் நடித்து இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். மேலும் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இவரது நடிப்பில் புஷ்பா 2 எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சிஎஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. அந்த சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்திருந்தார். மேலும் திரையரங்க உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வெளியீட்டின்போது நடிகர் அல்லு அர்ஜுன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சென்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக பெண் பலியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அல்லு அர்ஜுன் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

MUST READ