Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' படத்தில் பகத் பாசிலை அடையாளம் காண முடியவில்லை.... பிரபல தெலுங்கு நடிகை!

‘புஷ்பா 2’ படத்தில் பகத் பாசிலை அடையாளம் காண முடியவில்லை…. பிரபல தெலுங்கு நடிகை!

-

மலையாள திரை உலகில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் பகத் பாசில். இவர் தனது நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்று வருகிறார். 'புஷ்பா 2' படத்தில் பகத் பாசிலை அடையாளம் காண முடியவில்லை.... பிரபல தெலுங்கு நடிகை!மேலும் இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து மிரட்டி விடுவார். அந்த வகையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று குறுகிய நாட்களில் சுமார் 800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையில் இன்னும் சில நாட்களில் இப்படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மா, நடிகர் பகத் பாசில் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “புஷ்பா 2 படத்தில் பகத் பாசில் சாரின் என்ட்ரிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன். இறுதியில் அது நடந்தபோது என்னால் பகத் பாசில் சாரை அடையாளம் காண முடியவில்லை. நான் என் சகோதரரிடம் இது அவர்தானா? என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அந்த அளவிற்கு பகத் பாசில் சார் தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிரமமின்றி மாற்றி அமைக்கிறார். அதுதான் அவருடைய மேஜிக். பகத் பாசில் சார், உங்களைப் பெரிய திரையில் பார்ப்பது எப்போதுமே ஒரு விருந்துதான். உங்களின் நடிப்பின் ஒவ்வொரு பகுதியையும் நான் நேசித்தேன். உங்களுடைய அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ