Homeசெய்திகள்சினிமாபா. ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படத்தில் இணையும் பிரபல வில்லன் நடிகர்!

பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தில் இணையும் பிரபல வில்லன் நடிகர்!

-

பா. ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பா. ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படத்தில் இணையும் பிரபல வில்லன் நடிகர்!

இயக்குனர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். அந்த வகையில் இவர் அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர் வேட்டுவம் என்ற படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி இந்த வேட்டுவம் திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியானது. பா. ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படத்தில் இணையும் பிரபல வில்லன் நடிகர்!இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.பா. ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படத்தில் இணையும் பிரபல வில்லன் நடிகர்!

நடிகர் பகத் பாசில் மலையாள திரை உலகின் பிரபல நடிகராக வலம் வரும் நிலையில் தமிழில் வேலைக்காரன், மாமன்னன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்திலும் பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ