Homeசெய்திகள்சினிமாபிரபல வில்லன் நடிகருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு?

பிரபல வில்லன் நடிகருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு?

-

- Advertisement -

பிரபல வில்லன் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரபல வில்லன் நடிகருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு?நடிகர் எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் எஸ் ஜே சூர்யா தற்போது பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். அதே சமயம் இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். அந்த வகையில் ஸ்பைடர், மெர்சல், மாநாடு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து நடிப்பு அரக்கனாக மாறினார். அதே சமயம் கடந்த ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் வில்லனாக நடித்து பட்டய கிளப்பி இருந்தார்.பிரபல வில்லன் நடிகருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு? மேலும் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக எஸ் ஜே சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல் ஐ சி திரைப்படத்திலும், சியான் 62 படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் பாபி சிம்ஹா, வேதிகா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள ரஸாக்கர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க எஸ் ஜே சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எஸ் ஜே சூர்யாவால் அந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

இதற்கான காரணம் குறித்து எஸ் ஜே சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால், என்னால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் என்னை மன்னித்துவிடு தம்பி (பாபி சிம்ஹா). மேலும் ரஸாக்கர் படம் வெற்றி படமாக அமைய பட குழுவினரை வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ