Homeசெய்திகள்சினிமாஅடிப்படை அறிவு கிடையாது....மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை விமர்சித்த பிரபல எழுத்தாளர்!

அடிப்படை அறிவு கிடையாது….மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை விமர்சித்த பிரபல எழுத்தாளர்!

-

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, லால் ஜூனியர், பாலு வர்கீஸ் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அடிப்படை அறிவு கிடையாது....மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை விமர்சித்த பிரபல எழுத்தாளர்!இந்த படத்தை பரவா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் சைஜூ ஹாலித் செய்திருந்தார் சுசின் சியாம் இசையமைத்திருந்தார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான இந்த படம் கேரளா ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையேயும் பேராதரவை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அதேசமயம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதன்படி திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் பேச்சு தான். இந்நிலையில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படம் குறித்த விமர்சனத்தை தன்னுடைய கட்டுரையில் எழுதியுள்ளார்.அடிப்படை அறிவு கிடையாது....மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை விமர்சித்த பிரபல எழுத்தாளர்! அதாவது, “மஞ்சுமெல் பாய்ஸ் படம் எனக்கு எரிச்சலூட்டும் விதமாக இருந்தது. அந்த படத்தில் காட்டப்படுவது புனைவு அல்ல. தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரளத்து பொறுக்கிகளிடம் அந்த மனநிலை தான் இருக்கிறது. குடி குடி குடி குடி என விழுந்து கிடப்பது, அத்து மீறுவது என எந்த பொது நாகரிகமும் கிடையாது. அடிப்படை அறிவு கிடையாது. இந்த மலையாள பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது. ஆனால் அவர்களுடைய மொழி பிறருக்கு தெரிந்திருக்க வேண்டும் இன்று தெனாவெட்டு இருக்கும். குடியை அவர்கள் சினிமாவில் ஜாலி என்ற பெயரில் நார்மலைஸ் செய்து வைத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ