பிரபல யுடியூபர் ஒருவர் சூர்யா 45 படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது தனது 45ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்தது நடிகை சுவாசிகாவும் இந்த படத்தில் நடிக்க வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜி கே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது பேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடி யாரும் இல்லை என்றும் நடிகை திரிஷா இந்த படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதேசமயம் இந்த படத்தினை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.