Homeசெய்திகள்சினிமாபிரபல யூடியூபர் ராகுல் டிக்கி பைக் விபத்தில் மரணம்!

பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி பைக் விபத்தில் மரணம்!

-

- Advertisement -

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி. இவர் பைக் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி பைக் விபத்தில் மரணம்!

ராகுல் டிக்கி யூடியூபிலும் இன்ஸ்டாவிலும் நகைச்சுவையான வீடியோக்களை பதிவு செய்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர். இவருடைய உடல் பாவனையையும் முகபாவனையையும் கண்டு சிரிக்காத ஆளே இருக்க மாட்டார்கள். அந்த வகையில் இவரை கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேலானோர் பின்பற்றி வருகின்றனர். அந்த அளவிற்கு இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டானவர். இந்நிலையில் தான் 27 வயதுடைய யூடியூபர் ராகுல் டிக்கி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி இரவில் தன்னுடைய மனைவி தேவிகாஸ்ரீ- ஐ பார்ப்பதற்காக கோபி அருகே இருக்கும் கவுந்தப்பாடியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவருடைய பைக் பாலத்தின் நடுவில் உள்ள செண்டர் மீடியனில் மோதியது. நல்ல இந்த விபத்தில் ராகுல் டிக்கியின் பைக் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி பைக் விபத்தில் மரணம்! இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராகுல் டிக்கி ரத்த வெள்ளத்தில் போராடிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராகுல் டிக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல் ராகுல் டிக்கியின் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

MUST READ