Homeசெய்திகள்சினிமாநடிகரின் பிம்பமாக மாறும் ரசிகன் .... நல்லதா? கெட்டதா?

நடிகரின் பிம்பமாக மாறும் ரசிகன் …. நல்லதா? கெட்டதா?

-

கற்பனைக் கதையோ, கலர்ஃபுல் திரைப்படமோ ஒரு ரசிகனை பெரிதும் கவர்வது கதையின் நாயகன் தான். உலகம் முழுக்க பல நாயகர்கள் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். நடிகரின் பிம்பமாக மாறும் ரசிகன் .... நல்லதா? கெட்டதா?குறிப்பாக இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் தனக்கு விருப்பமான நாயகனை தன் அண்ணனாகவும், தலைவனாகவும், கடவுளாகவும் போற்றும் அளவுக்கு ஹீரோக்களின் மீதான அன்பு சொல்லில் அடங்காதது. கோவில்களில் கடவுளுக்கு மாலையிட்டு பாலாபிஷேகம் செய்வது போலவே தன் நாயகனின் கட் அவுட்டுக்கு பூஜை செய்து தனது அன்பை வெளிப்படுத்தும் வினோதமான பக்தன்தான் ரசிகன். நிஜ வாழ்வில் காதல், கோபம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், சோகம், நடை, உடை, ஊக்கம் என எந்த ஒரு உணர்விலும் தன் நாயகனின் பாணியை பிரதிபலிக்கும் கண்ணாடி தான் ரசிகன்.நடிகரின் பிம்பமாக மாறும் ரசிகன் .... நல்லதா? கெட்டதா? ஒவ்வொரு முறையும் தன் ஹீரோவின் படம் ஜெயிக்கும் பொழுது தான் பெற்ற வெற்றியாய் கொண்டாடுபவனும் ரசிகன் தான். படங்கள் தோல்வியை தழுவும் போதும் தன் ஹீரோவை விட்டுக் கொடுக்காமல் தட்டிக் கொடுப்பவனும் ரசிகன் தான். அத்தகைய ரசிகனுக்கு கைமாறாக அந்த ஹீரோ என்ன செய்தாலும் நிகராகாது. அதே சமயம் அவர்களை நல்வழிப்படுத்தும் கடமையும் நாயகர்களுக்கு உள்ளது. பல நல்ல உதவிகரமான சமூக சேவைகளை முன்னெடுக்கும் பொழுது ரசிகர்கள் அதையே பின்பற்றுகிறார்கள். ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுகிறார்கள். குழுவாக இரத்த தானம் செய்து பல உயிர்களை காக்கின்றனர். நடிகரின் பிம்பமாக மாறும் ரசிகன் .... நல்லதா? கெட்டதா?சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றனர். இது போன்ற பல நற்செயல்கள் ஏராளம். அதே போல நாயகனின் ஒரு சில கருத்துக்களை சீரியஸாக எடுத்துக்கொண்டு சிரமப்படுவதும் உண்டு. எதிரியை வீழ்த்தி அடுத்த இரண்டு மணி நேரத்தில் திரைப்படத்தில் நாயகன் வெல்லலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் வெற்றி என்பது அவ்வளவு எளிதானது அல்ல. நாயகன் கதாபாத்திரத்திற்காக திரையில் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் ஸ்டைல் என நினைத்து ரசிகன் நிஜ வாழ்வில் குழப்பிக் கொள்கிறான். முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும் பின்னர் தான் சினிமா எல்லாம் என நாயகர்கள் எடுத்துக் கூறினாலும் ரசிகர்கள் அதை கண்டுகொள்ளாமல் நடப்பது அவலத்தின் உச்சம். கதையின் தேவைக்காக நாயகன் திரையில் எடுக்கும் ரிஸ்குகளை நிஜத்தில் முயன்று பல இளைஞர்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். நடிகரின் பிம்பமாக மாறும் ரசிகன் .... நல்லதா? கெட்டதா?இதனால் பாதிக்கப்படுவது அந்த இளைஞன் மட்டுமல்ல அவனை சார்ந்து இருக்கும் குடும்பமும் தான். மேடையில் நாயகன் பேசும்பொழுது கைதட்டி விசில் அடித்து உணர்வுபூர்வமாக ரசிக்கும் ரசிகன் அடுத்த சில நொடிகளிலேயே அவர் பேசிய நல்ல விஷயங்களையும் மறந்து விடுகிறான். குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டிய பொழுதுபோக்கை வாழ்வின் மிக முக்கியமான பங்காக எடுத்துக் கொண்டு பொன்னான பொழுதை மண்ணோடு மட்கச் செய்கிறான். வாழ்வில் சில நேரங்களில் அடிபட்டும் அதை உணராத ரசிகன் தன் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குகிறான். அதை உணர்ந்து திருத்திக் கொள்ளும் போது நாயகனின் சரியான பிம்பமாக ரசிகன் மாறுவான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கப் போவதில்லை. ஏற்றம் தரும் மாற்றங்கள் என்றுமே வாழ்வில் சிறப்பு தான். அந்தச் சிறப்புதான் ஒவ்வொரு ரசிகனையும் தன் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாற்றுகிறது.

MUST READ