சுந்தர்.சி தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். அதேசமயம் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் சுந்தர். சி. இது ஒரு பக்கம் இருந்தாலும, மறுபக்கம் அரண்மனை சீரிஸ்களையும் இயக்கி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவர் இயக்கிய அரண்மனை 1, 2, 3 ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படமும் வெளியாகி கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அடுத்தது சுந்தர் சி, அரண்மனை 5 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டு வருகிறார்.
இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது குரோம்பேட்டையில் அரண்மனை 5 படத்திற்கான பிரம்மாண்ட செட் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரண்மனை 5 திரைப்படம் வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் அரண்மனை 5 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -