Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் 'கங்குவா' படத்திற்கு வந்த புதிய சிக்கல்!

சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்!

-

சூர்யாவின் 42வது படமாக கங்குவா எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சூர்யாவின் 'கங்குவா' படத்திற்கு வந்த புதிய சிக்கல்!அந்த வகையில் 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு, நட்டி நடராஜ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான படத்தின் முதல் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து நேற்று (நவம்பர் 10) வெளியான ரிலீஸ் ட்ரெய்லர் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. ஆகையினால் கங்குவா படத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் பலரும் இருந்து வருகின்றனர். அதே சமயம் படக்குழுவினர் சார்பில் இந்த படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 11,500ககும் அதிகமான திரைகளில் திரையிடப்படும் என சொல்லப்பட்டிருந்தது. இன்று முதல் டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்ற கடன் பிரச்சனையால் படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கடன் தொகை திருப்பி செலுத்தப்பட்ட நிலையில் தடை நீக்கப்பட்டது.சூர்யாவின் 'கங்குவா' படத்திற்கு வந்த புதிய சிக்கல்! இவ்வாறு ஒவ்வொரு தடைகளையும் கடந்து வரும் கங்குவா திரைப்படத்திற்கு மீண்டும் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது அமரன் திரைப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கங்குவா திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கும் என்று தகவல் வெளியாகி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோர்களுக்கு இடையிலான பங்குத்தொகை பிரச்சனையும் மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது. எனவே கங்குவா திரைப்படம் திரைக்கு வர இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக எத்தனை திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ