Homeசெய்திகள்சினிமாரூ.175 கோடி பட்ஜெட்டால் வந்த புதிய சிக்கல்....'D55' படத்தில் ஏற்படும் மாற்றம்!

ரூ.175 கோடி பட்ஜெட்டால் வந்த புதிய சிக்கல்….’D55′ படத்தில் ஏற்படும் மாற்றம்!

-

- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். அதேசமயம் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். ரூ.175 கோடி பட்ஜெட்டால் வந்த புதிய சிக்கல்....'D55' படத்தில் ஏற்படும் மாற்றம்!இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார் தனுஷ். அந்த வகையில் ஏற்கனவே லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 55 ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். அதன்படி தற்காலிகமாக D55 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்கிறார் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகி படம் தொடர்பான பூஜையும் நடத்தப்பட்டது. அடுத்தது விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரூ.175 கோடி பட்ஜெட்டால் வந்த புதிய சிக்கல்....'D55' படத்தில் ஏற்படும் மாற்றம்!இந்நிலையில் தான் இந்த படத்தின் பட்ஜெட்டால் படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது ராஜ்குமார் பெரியசாமி தனுஷுக்காக தயார் செய்து வைத்துள்ள D55 படத்தின் பட்ஜெட் ரூ.175 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் அன்புச் செழியன் இத்தனை கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரிப்பதா என்று யோசிப்பதாகவும் இதன் காரணமாக விரைவில் இந்த படத்தின் இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ