Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்..... என்னவாக இருக்கும்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்….. என்னவாக இருக்கும்!

-

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேசமயம் இவர், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்..... என்னவாக இருக்கும்!அதில் ஒன்று தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அமரன் திரைப்படம். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அதாவது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 21 வது படமான இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே காஷ்மீர் போன்ற பகுதியில் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. அடுத்ததாக இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ தள பக்கத்தில் “இந்த வாரம் புதன்கிழமை ( 17.07.2024) ” என்ற அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே இது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தொடர்பான அப்டேட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ