புதுடில்லியில் இன்று 70 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர் என அனைத்து பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2022 இரண்டாம் ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த விழா 2024 அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நடைபெறும் இந்த விழாவில் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது ஏ ஆர் ரஹ்மானின் ஏழாவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது கடந்த 1992ல் வெளியான ரோஜா, மின்சார கனவு, கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகளை வென்றுள்ளார் ஏ ஆர் ரகுமான். அடுத்தது லகான், மாம் ஆகிய இந்தி படங்களுக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருதை வென்றுள்ளார்.