கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். செல்லமே படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமான அவர், சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
தற்போது விஷால் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கௌதம் மேனன், சமுத்திரக்கனி, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
A sneak peek into the making of #Rathnam – as myself, director #Hari, DOP @mynnasukumar and stunt master Kanal Kannan plan a single shot action sequence 🔥
A film by #Hari. Coming to theatres, summer 2024 & a @ThisisDSP musical @priya_Bshankar… pic.twitter.com/x9Ih7CaOso
— Vishal (@VishalKOfficial) January 13, 2024