அட்லீ – அல்லு அர்ஜுன் படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இதைத்தொடர்ந்த இவர் பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தையும் இயக்கி பிரம்மாண்ட வெற்றி பெற்றார். தற்போது இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது. அதேசமயம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரஜினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வரும் நிலையில் இந்த படத்தில் திடீரென்று புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி பட்ஜெட் பிரச்சனை காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அதற்கு பதிலாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் இந்த படத்தை இயக்க இயக்குனர் அட்லீ ரூ. 100 கோடி சம்பளம் கேட்டு இருப்பதால் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.