Homeசெய்திகள்சினிமா'கங்குவா' டீசரில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

‘கங்குவா’ டீசரில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

-

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை, வீரம், வேதாளம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.'கங்குவா' டீசரில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்! ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே இ ஞானவேல் இந்த படத்தை தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இதில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியில் ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி போன்ற பகுதிகளின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டது. அதேசமயம் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து டப்பிங் பணிகளும் முடிவடைந்துள்ளது. தற்போது இரண்டாம் பாகத்திற்கு லீடு கொடுக்கும் வகையிலான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் படத்தின் முன்னோட்ட வீடியோவும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. அடுத்ததாக ரசிகர்கள் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 'கங்குவா' டீசரில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!இந்நிலையில் தான் சமீபத்தில் படத்தின் டீசர் தயாராகி விட்டதாகவும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டீசர் வெளியாக இருப்பதாகவும் தகவல் கசிந்து இருந்தது. தற்போது இதன் புதிய அப்டேட் என்னவென்றால் டீசரிலேயே ரிலீஸ் தேதியையும் அறிவிக்கப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனராம். எனவே இதன் மூலம் தேர்தல் தேதி அறிவிப்பிற்காக காத்திருந்த கங்குவா பட குழுவினர் விரைவில் ரிலீஸ் செய்தியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படம் பத்திற்கும் மேலான மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ