Homeசெய்திகள்சினிமாநடிகர் விஜய் சொன்ன ஒரு சொல்... மொத்தமாக மாறிப்போன விஜய் மக்கள் இயக்கம்!

நடிகர் விஜய் சொன்ன ஒரு சொல்… மொத்தமாக மாறிப்போன விஜய் மக்கள் இயக்கம்!

-

நடிகர் விஜய் சொன்ன ஒரு சொல்... மொத்தமாக மாறிப்போன விஜய் மக்கள் இயக்கம்!மிக்ஜம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகள் விரைவாக கிடைக்கும் படி நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பல தன்னார்வலர்களும் திரைத்துறை பிரபலங்களும் மக்களுக்கு இறங்கி உதவி செய்து வருகின்றனர். பல தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுடைய நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்து கொண்டு மக்களுக்கு உதவியதைக் காண முடிந்தது. இதுவும் அந்நிறுவனத்தின் ஒரு வகையான மார்க்கெட்டிங் தான் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சினிமா பிரபலங்களும் தாங்கள் செய்யும் உதவிகளை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர் என்ற கருத்தும் பரவலாகக் காணப்படுகிறது.

இதற்கிடையே தான் நடிகர் விஜயின், விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது சாப்பாடு பரிமாறி செல்பவரின் பின்னால் ஒருவர் நடிகர் விஜயின் ஃபோட்டோவை கையில் வைத்துக் கொண்டு வலம் வந்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பகிரப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் தாங்கள் உண்ணும் இந்த உணவை விஜய் தான் கொடுத்தார் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவ்வாறு செய்யப்படுகிறது என பல யூட்யூப் சேனல்களில் விமர்சனங்கள் இருந்தன.

மற்றொருபுறம் விஜயின் மீது இருந்த அன்பினால் தொண்டர்கள் தான் இவ்வாறு செய்தனர் விஜய்க்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது என்று ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட விஜய், மன்ற நிர்வாகிகளுக்கு ஓர் உத்தரவிட்டுள்ளார். வீணான பப்ளிசிட்டி வேண்டாம், எந்தவிதமான ஸ்டிக்கரும் விளம்பரங்களும் இல்லாமல் மக்களுக்கு உதவி செய்வதை தீவிரப் படுத்துங்கள் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விஜயின் உத்தரவை வேத வாக்காக எடுத்துக் கொண்ட மன்ற நிர்வாகிகள் தற்போது எந்தவித பப்ளிசிட்டியும் இல்லாமல் மக்களுக்கு உதவுவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனராம்.

MUST READ