Homeசெய்திகள்சினிமாமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய ஆதி - நிக்கி தம்பதி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய ஆதி – நிக்கி தம்பதி

-

- Advertisement -

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய ஆதி - நிக்கி தம்பதிமிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பெருவெள்ளம் சென்னை மக்களை பெரிய அளவில் பாதித்தது. இதனால் சென்னை வாழ் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு சூர்யா, கார்த்தி, ஹரிஷ் கல்யாண், பார்த்திபன் KPY பாலா போன்றோர் நிதி உதவிகளை வழங்கியும், உணவுகள் வழங்கியும் உதவி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வெள்ள நிவாரண உதவிகளை தனது மக்கள் நீதி மய்யம் சார்பில் செய்து வருகிறார். நடிகர் விஜய்யும் மக்கள் இயக்க நிர்வாகத்தின் சார்பில் உதவி செய்து வருகிறார். இந்த வகையில் தற்போது ஆதி – நிக்கி கல்ராணி தம்பதியினர் பகல் நேரங்களில் வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவில் வழங்கி வந்தனர். அதேசமயம் இரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பல்வேறு தரப்பினர் இடையே ஆதி – நிக்கி கல்ராணிக்கு பாராட்டுகளையும் பெற்று தருகிறது.

ஆதி தற்போது சப்தம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவருக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது. ஏற்கனவே இவர்கள் மரகத நாணயம் எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ