Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் ஆதியின் 'சப்தம்' பட டீசர்!

கவனம் ஈர்க்கும் ஆதியின் ‘சப்தம்’ பட டீசர்!

-

நடிகர் ஆதி, தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். அதைத்தொடர்ந்து அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கவனம் ஈர்க்கும் ஆதியின் 'சப்தம்' பட டீசர்!அதே சமயம் இவர் அறிவழகன் இயக்கத்தில் ஈரம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஈரம் பட இயக்குனர் அறிவழகன் உடன் இணைந்து நடிகர் ஆதி பணியாற்றியுள்ளார்.கவனம் ஈர்க்கும் ஆதியின் 'சப்தம்' பட டீசர்!அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு சப்தம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆதி, லட்சுமிமேனன், சிம்ரன், லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படமும் ஹாரர் திரில்லர் கதை களத்தில் தான் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது டீசரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். திகிலூட்டும் பின்னணி இசையில் வெளியாகி உள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே கவனம் பெற்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ஆகவே இதன் மூலம் இந்த படம் ஈரம் படத்தை போல் ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டீசரில் இந்த படம் 2024 கோடையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ