Homeசெய்திகள்சினிமாவியக்க வைக்கும் வகையில் பல கோடி ரூபாய்க்கு விற்பனையான பிரபாஸ் படம்!

வியக்க வைக்கும் வகையில் பல கோடி ரூபாய்க்கு விற்பனையான பிரபாஸ் படம்!

-

பிரபல முன்னணி நடிகரான பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு அதிக வரவேப்ரு பெறும் பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார். தற்போது ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்குனர் ஓம்ராவத் இயக்கியுள்ளார். இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோபைல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து கீர்த்தி சனோன், சைப் அலிகான், சன்னி சிங், தேவதத்தா நாகே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இந்த படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போதைய அப்டேட் என்னவென்றால், ஆதிபுருஷ் திரைப்படம் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிபள் மீடியா கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.170 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனமே இந்த படத்தை வெளியிடும் உரிமத்தை கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

MUST READ