ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்கள். ஹரிஷ் கல்யாண் தற்போது தமிழ் சினிமாவில் முன்னேறி வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே, ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் புதிய படத்தில் இணைந்து நடித்து இருக்கின்றனர். படத்திற்கு ‘லப்பர் பந்து’ என்று தலைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஸ்வஸ்திகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இருவரும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.