Homeசெய்திகள்சினிமாவெப் தொடராக உருவாகும் 'ஆயிரத்தில் ஒருவன் 2'..... செல்வராகவன் கொடுத்த அப்டேட்!

வெப் தொடராக உருவாகும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’….. செல்வராகவன் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.வெப் தொடராக உருவாகும் 'ஆயிரத்தில் ஒருவன் 2'..... செல்வராகவன் கொடுத்த அப்டேட்!தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் செல்வராகவன். இவர் ஆரம்பத்தில் இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது தொடர்ந்து பல படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் செல்வராகவன். சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. மேலும் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அப்போது இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய படங்கள் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். வெப் தொடராக உருவாகும் 'ஆயிரத்தில் ஒருவன் 2'..... செல்வராகவன் கொடுத்த அப்டேட்!அதன்படி அவர் கூறியதாவது, “ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய கதைகளை வெப் தொடர்களாக உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். வெப் தொடராக இயக்கினால் அதிக நேரம் கிடைக்கும். எனவே சொல்ல வேண்டிய கருத்தை தெளிவாக சொல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ