Homeசெய்திகள்சினிமாபாலியல் புகாரில் சிக்கிய விஜய் ஆபீஸ் கணக்காளர்.....கைதானதால் பரபரப்பு!

பாலியல் புகாரில் சிக்கிய விஜய் ஆபீஸ் கணக்காளர்…..கைதானதால் பரபரப்பு!

-

பாலியல் புகாரில் சிக்கிய விஜய் ஆபீஸ் கணக்காளர்.....கைதானதால் பரபரப்பு!தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் விஜய். இவர் விஜய் மக்கள் இயக்கம் என்னும் அமைப்பின் மூலம் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார். அடுத்ததாக விஜய் அரசியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறார். சமீபத்தில் கூட தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியிருந்தார். கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களைத் திறந்தாலே இந்த செய்தி தான் காட்டுத்தீ போல பரவி இருந்தது. நிவாரணப் பொருட்கள் வழங்கிய போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன. நடிகர் விஜய் மீது ஏற்கனவே மக்கள் வைத்திருந்த மரியாதை மேலும் அதிகரிக்க இது காரணமாக அமைந்தது. இந்நிலையில் திடீரென அதிர்ச்சி தரும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருவதாக கூறிய ராஜேஷ் என்பவரின் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயது நிரம்பிய சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ராஜேஷ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் சென்னையில் பிரபல தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். பாலியல் புகாரில் சிக்கிய விஜய் ஆபீஸ் கணக்காளர்.....கைதானதால் பரபரப்பு!சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் இது தொடர்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண் கூறி இருப்பதாவது நடிகர் விஜயின் அலுவலக கணக்காளர் என பொய்யாக கூறி சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான ராஜேஷ் என்பவர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதை மறைத்து தன்னிடம் ஆசை வார்த்தைகள் காட்டி பலமுறை பாலியல் ரீதியாக உறவு கொண்டதாகவும், ரூபாய் பத்து லட்சம் வரை தன்னிடம் வாங்கியுள்ளதாகவும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார் என கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ராஜேஷ் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறது. நடிகர் விஜயின் மீது நல்ல அபிப்பிராயம் பரவி வருகிற இந்த நேரத்தில் திடீரென அவர் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பது போன்ற இந்த நபரின் போலியான செயல் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பை பெற்று வருகிறது.

MUST READ