நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு சலார் திரைப்படம் வெளியானது. இந்த படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து பிரபாஸ், ராஜாசாப், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள திரைப்படம் தான் கல்கி 2898AD. இந்த படம் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் பிரபாஸுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி போன்றோர் நடித்துள்ளனர். அதே சமயம் இந்த படமானது டைம் டிராவல் கதை களத்தில் சயின்ஸ் பிக்சன் படமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படமானது ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இதன் ட்ரெய்லரும் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் பங்கேற்ற நடிகர் பிரபாஸ் கமல் குறித்து பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது, “கமல் சார் படத்தை பார்த்துவிட்டு எனது பெற்றோரிடம் கமல் சாரின் உடை போல் எனக்கும் வாங்கி தர வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறேன். இப்போது அவருடன் இணைந்து நடித்த தருணங்கள் எனது வாழ்வின் பெருமையான தருணங்கள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -