Homeசெய்திகள்சினிமாமேடையில் மருமகனை பாராட்டிய ஆக்சன் கிங் அர்ஜுன்......மாமனாரை சார்ன்னு சொன்ன ஐஸ்வர்யா!

மேடையில் மருமகனை பாராட்டிய ஆக்சன் கிங் அர்ஜுன்……மாமனாரை சார்ன்னு சொன்ன ஐஸ்வர்யா!

-

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவரது மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. மேடையில் மருமகனை பாராட்டிய ஆக்சன் கிங் அர்ஜுன்......மாமனாரை சார்ன்னு சொன்ன ஐஸ்வர்யா!இவர்களது திருமணத்திற்கு ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் திரண்டு வந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அர்ஜுன் தம்பி ராமையா, உமாபதி, ஐஸ்வர்யா ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அந்த விழாவில் தம்பி ராமையா, “எங்கள் குடும்பத்திற்கு ஐஸ்வர்யா மருமகளாக வந்தாலும் அவர் எங்களுக்கு மகள்தான். அவர் தாயாக இருந்து எங்கள் குடும்பத்தை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்” என்று பேசியுள்ளார்.மேடையில் மருமகனை பாராட்டிய ஆக்சன் கிங் அர்ஜுன்......மாமனாரை சார்ன்னு சொன்ன ஐஸ்வர்யா!

அர்ஜுன் பேசிய போது, “தம்பி ராமையாவின் குடும்பம் மிகவும் பண்பாடு உள்ள குடும்பம். உமாபதி மிகவும் திறமைசாலி, அமைதியானவர், பண்பாளர், நகைச்சுவை தன்மையுடையவர். மேலும் நீங்கள் ஒரு ஆக்சன் கிங்கை விரைவில் பார்க்கலாம். எனது மருமகன் என்பதற்காக நான் இதை கூறவில்லை. உண்மையிலேயே உமாபதி திறமைசாலி” என்று மருமகனை வாழ்த்தியுள்ளார் ஆக்சன் கிங் அர்ஜுன்.மேடையில் மருமகனை பாராட்டிய ஆக்சன் கிங் அர்ஜுன்......மாமனாரை சார்ன்னு சொன்ன ஐஸ்வர்யா!

ஐஸ்வர்யா பேசுகையில் தம்பி ராமையாவை சார் என்று சொன்னதும் ஆக்சன் கிங் அர்ஜுன் மாமனார் என்று சொல்லு என்று தன் மகளை கலாய்த்தார். மேலும் ஐஸ்வர்யா, “எனக்கு என் வீட்டில் என் பெற்றோர்கள் ரொம்ப சுதந்திரம் கொடுத்தார்கள். அதுபோலவே எனக்கு இன்னொரு குடும்பம் கிடைத்திருக்கிறது. உமாபதி எல்லா விஷயத்திலும் எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி” என்று பேசியுள்ளார்.

MUST READ