Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்கும் 'மரகத நாணயம் 2'..... நடிகர் ஆதி கொடுத்த அப்டேட்!

விரைவில் தொடங்கும் ‘மரகத நாணயம் 2’….. நடிகர் ஆதி கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் ஆதி, மரகத நாணயம் 2 குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் மிருகம், ஈரம் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது இவர், ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் சப்தம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.விரைவில் தொடங்கும் 'மரகத நாணயம் 2'..... நடிகர் ஆதி கொடுத்த அப்டேட்! இந்த படம் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் மரகத நாணயம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், டேனியல் போப், எம் எஸ் பாஸ்கர், முனீஸ் காந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து உருவாகப் போவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அதேசமயம் மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இரும்பொறை அரசனாக நடிக்கப் போகிறார் எனவும் தகவல் கசிந்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆதி, மரகத நாணயம் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது, “மரகத நாணயம் பாகம் 2 திரைப்படம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே டீமும் மற்றும் கூடுதலாக மிகப்பெரிய டீமும் இனிய இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய படமாக இருக்கும். தரமான படத்தை வழங்க நாங்கள் நேர்மையுடன் பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ