இந்தியா முழுவதும் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவிட்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கியது. இதையடுத்து, பல கோடி செலவு செய்து கோயிலை கட்டிமுடித்து, அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் திறக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, நாட்டில் உள்ள பிரபலங்கள், நட்சத்திரங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அயோத்தில் ராமர் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. விழாவை முன்னிட்டி அயோத்தி ராமர் கோயில் பல விதமான விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமாக காட்சி அளித்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், மக்களும் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த லட்சக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
#WATCH | Actors #AmitabhBachchan and #AbhishekBachchan at the Shri Ram Janmabhoomi Temple in #Ayodhya to attend #RamMandirPranPrathistha
📹: ANI
Track LIVE updates https://t.co/m7braKQovj pic.twitter.com/H8o5Frp9t6
— Hindustan Times (@htTweets) January 22, 2024