நடிகர் அஜித் தனது மகனுடன் ரேஸிங்கில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்தது விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சிறுவயதிலிருந்தே பைக், கார் ஓட்டுவதில் ஆர்வம் உடைய அஜித் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நண்பர்களுடன் பைக், கார் ஓட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் அஜித்குமார் ரேஸிங் அணி ஒன்றைத் தொடங்கி துபாய் மற்றும் இத்தாலியில் அடுத்தடுத்து நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்றதோடு மட்டுமல்லாமல் வெற்றி பெற்று சாதனையும் படைத்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
Father Son Goals🫶♥️#Ajithkumar & his son #Aadvik driving together😍🏎️ pic.twitter.com/Jb77hascOz
— AmuthaBharathi (@CinemaWithAB) April 4, 2025
அந்த வகையில் தற்போது தனது மகன் ஆத்விக் உடன் இணைந்து சென்னையில் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.