பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் வேதாளம், வீரம், விவேகம், விஸ்வாசம் போன்ற வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். இருப்பினும் இவர் ரஜினி நடிப்பில் இயக்கி இருந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. எனவே தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மிகப் பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகியுள்ளது. அதன்படி 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படமானது பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு, நட்டி நடராஜ், பாபி தியோல் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் K.E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக தூண்டியுள்ளது. அதேசமயம் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
Thala #AjithKumar Watched The Glimpse Of #Kanguva 🤩
And yes AK wants to act again with SiruthaiSiva in #AK64 😌pic.twitter.com/tX4hdu8nEs
— Kolly Corner (@kollycorner) May 25, 2024
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “நடிகர் அஜித் கங்குவா படத்தின் சில காட்சிகளை பார்த்தார். அவருக்கு கங்குவா படம் மிகவும் பிடித்திருக்கிறது. ஆகையால் மகிழ்ச்சியடைந்த அஜித், மீண்டும் சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க நினைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.