Homeசெய்திகள்சினிமாபுஷ்பா 2 படத்தின் முதல் பாடல்... மே 1-ல் வெளியீடு...

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்… மே 1-ல் வெளியீடு…

-

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா 2 தி ரூல். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பும் இன்று வரை முடிவடையாமல் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. இருப்பினும், படத்திற்கான புரமோசன் பணிகளும் அவ்வப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஓடிடி உரிமம், டிஜிட்டல் ரைட்ஸ் என பட வெளியீட்டுக்கு முன்பு புஷ்பா இரண்டாம் பாகத்திற்கு லாபம் வந்துவிட்டது.

கடந்த 2021-ம் ஆம்டு வெளியான புஷ்பா முதல் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஊம் சொல்றியா மாமா, ஸ்ரீ வள்ளி உள்பட அனைத்து பாடல்களுமே பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இருவருக்குமே புஷ்பா படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது.

அண்மையில் நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2-ம் பாகத்தின் முன்னோட்டம் வெளியாகி அதிரடி கிளப்பியது. மேலும், சமூக வலைதளங்களில் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வைரலானது. இப்போது படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. புஷ்பா புஷ்பா… புஷ்பராஜ் என்ற முதல் பாடல் வரும் மே மாதம் 1-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ