நடிகர் அருள்நிதி புதிய படம் ஒன்றில் பாக்ஸராக நடிக்க இருக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் கடைசியாக டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் அருள்நிதி, ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். அந்த வகையில் தற்போது பம்பர் படத்தின் இயக்குனர் எம். செல்வகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தேன் படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் அருள்நிதி, கொம்பன் படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் அருள்நிதி மற்றும் முத்தையா கூட்டணியில் உருவாகும் புதிய படமானது டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகிறது என்றும் இந்த படத்தில் நடிகர் அருள்நிதி பாக்ஸராக நடிக்கிறார் என்றும் புதிய தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.