Homeசெய்திகள்சினிமாஅவங்க இந்த படத்தை மறுபடி பாக்கணும்னு சொன்னாங்க.... 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' குறித்து அருண் விஜய்!

அவங்க இந்த படத்தை மறுபடி பாக்கணும்னு சொன்னாங்க…. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ குறித்து அருண் விஜய்!

-

- Advertisement -

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படக்குழுவினரை அருண் விஜய் பாராட்டியுள்ளார்.அவங்க இந்த படத்தை மறுபடி பாக்கணும்னு சொன்னாங்க.... 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' குறித்து அருண் விஜய்!

தனுஷின் இயக்கத்தில் உருவாகியிருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இன்று (பிப்ரவரி 21) திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அறிமுக நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.அவங்க இந்த படத்தை மறுபடி பாக்கணும்னு சொன்னாங்க.... 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' குறித்து அருண் விஜய்! ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியானது. அதன்படி ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகர் அருண் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினரை பாராட்டி பேசியுள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் செம ஜாலியாக இருந்தது. தனுஷின் இன்னொரு பரிமாணத்தை பார்க்க முடிந்தது. பவிஷ் ஒரு புதுமுக நடிகர் போல் இல்லாமல் நன்றாக நடித்திருந்தார்.

எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கிறது. இளைஞர்கள் அத்தனை பேரையும் அது கனெக்ட் செய்யும். இந்த படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகும். என் மகளுடன் இந்த படத்தை பார்க்க வந்திருந்தேன். படத்தை பார்த்த பின் அவரிடம் கேட்டபோது நன்றாக இருக்கிறது மறுபடியும் பார்க்க வேண்டும் என்று சொன்னார். பவிஷ் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ