அருவி படத்தின் மூலம் பிரபலமான மதன் தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் உருவான வெளியான அருவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மதன். அந்தப் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதையடுத்து தற்போது அவர் சினிமா வட்டாரத்தில் அருவி மதன் என்று தான் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் கர்ணன், பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் அயலி வெப் சீரிஸில் இவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதையடுத்து அயோத்தி, மாமன்னன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் உள்ளிட்ட படங்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில் அருவி மதன் தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹரிஷ் உத்தமன் கதாநாயகனாக நடிக்கிறார். மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட படங்களின் மூலம் வரவேற்பு பெற்ற ஷீலா ராஜ்குமார் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
ரவுடி பேபி புகழ் ஆலியா இவர்களின் மகளாக நடிக்கிறார். மேலும் திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பார்த்து அவருக்கு மிகவும் பிடித்திவிட்டதால் தனது V HOuse Productions நிறுவனத்தின் மூலம் படத்தை வெளியிட இருக்கிறாராம். படத்திற்கு நூடுல்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.