மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக ஆர்யா தீவிரமாக தயாராகி வரும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் ரசிகர்களாலும், திரையுலகினராலும் சார்மி என அன்புடன் அழைக்கப்படும் சாக்லேட் பாய் நடிகர் ஆர்யா. 2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் ஆர்யா. இதைத் தொடர்து கலாபக் காதலன், பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, இப்படி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கியிருப்பார். குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளியானது.
இத்திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருப்பார். மேலும், பசுபதி, முத்து குமார், ஜான் கொக்கேன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்ககு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்தார், இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் ஆர்யாவின் திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாகவும அமைந்தது. இதைத் தொடர்ந்து ஆர்யா நடித்த எனிமி, கேப்டன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
Ready to shoot the Introduction for #MrX 💪
Let's rollllll it brother @itsmanuanand 🔥
First look and Teaser soon 🤩
Brother @Gautham_Karthik is already killing it in the film 🔥💪@realsarathkumar sir the Real macho Man 💪💪@ManjuWarrier4 The Iron Lady of #MrX 💪… pic.twitter.com/BSIEBhBuO8— Arya (@arya_offl) February 6, 2024