Homeசெய்திகள்சினிமாஅசோக் செல்வன் பிறந்தநாள்... திரைப்பிரபலங்கள் வாழ்த்து...

அசோக் செல்வன் பிறந்தநாள்… திரைப்பிரபலங்கள் வாழ்த்து…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் நடிகர் அசோக் செல்வன் நல்ல வரவேற்பைப் பெறும் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் நெகிடி, கூட்டத்தில் ஒருவன், ‘ஓ மை கடவுளே‘ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே, நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் பரவி வந்தன. அதன்படி அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனின் திருமணம் செப்டம்பர் 13-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்

இந்நிலையில், அசோக் செல்வன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர், நடிகைகள் மற்றும் திரைப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ