Homeசெய்திகள்சினிமாநகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமணம்... முதலமைச்சர் நேரில் வாழ்த்து...

நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமணம்… முதலமைச்சர் நேரில் வாழ்த்து…

-

பிரபல நகைச்சுவை நடிகர் சார்லியின் மகன் திருமணம், கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

கடந்த 1983-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சார்லி. இதைத் தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் இவரது நகைச்சுவைக்கு தனி ரசிகர்கள் உள்ளனர்

 

விஜய் மற்றும் சூர்யா நடித்த பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் கோபால் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த வேடம் இன்றுவரை மக்களால் ரசிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக நகைச்சுவை மட்டுமன்றி, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சார்லியின் இளைய மகன் அஜய் தங்கசாமிக்கு சென்னை சாந்தோம் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. மயிலாப்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில், திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திச் சென்றார்.

MUST READ