நான் கவலையாக இருக்கும்போது எம்ஜிஆர் சொன்ன ஒரு வார்த்தை தன்னை முழுமையாக மாற்றியது என நடிகர் சிரஞ்சீவி பேசியுள்ளார்.
தெலுங்கில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் போலா சங்கர். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பதால் தனது அடுத்த படத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிக்கும் 156 வது படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை பிம்பிசாரா படத்தின் இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது நடிகை திரிஷா நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை படத்தின் இயக்குனர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். ஃபேண்டஸி கதைகள் உருவாகி வரும் மெகா 156 படத்திற்கு விஸ்வம்பரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், எம்ஜிஆர் குறித்து சிரஞ்சீவி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. படத்தில் நான் நடிக்கும்போது முன்பு அதிகப்படியான டேக் எடுப்பேன் அப்போது பிலிம் வீணாகுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவிப்பர். அது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அப்போது, ஒரு நாள் தன்னிடம் எம்ஜிஆர் அதிக டேக் எடுப்பது பார்ப்பவர்களுக்கு தெரியாது. அதனால், தங்களின் பெஸ்டை கொடுங்கள் என்றார். அன்றில் இருந்து எனக்கு குற்ற உணர்ச்சி போனது என்று தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.