நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படக்குழுவுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அந்த வகையில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ராஞ்சனா (அம்பிகாபதி), அத்ரங்கி ரே (கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது ஆனந்த் எல் ராய், தனுஷ் கூட்டணியில் தேரே இஷ்க் மெய்ன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. மூன்றாவது முறை இணைந்துள்ள இந்த கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது.
அதன்படி இப்படமும் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடிக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். எல்லோ கலர் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் தனுஷ், ஆனந்த் எல் ராய், கிரித்தி சனோன் ஆகிய தேரே இஷ்க் மெய்ன் படக்குழுவினருடன் ஹோலி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படமானது 2025 நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -