Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை.... நடிகர் ஹரிஷ் கல்யாண்!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை…. நடிகர் ஹரிஷ் கல்யாண்!

-

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை.... நடிகர் ஹரிஷ் கல்யாண்!நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல், லப்பர் பந்து, நூறு கோடி வானவில் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. மேலும் சமீபத்தில் தோனி தயாரிப்பில் எல்ஜிஎம் திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள பார்க்கிங் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ஜூ ஜூ சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கார் ஒன்றை பார்க்கிங் செய்வதினால் உருவாகும் ஈகோ கிளாஸ் சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இன்றுள்ள காலகட்டங்களில் பொருத்தமான கதை அம்சத்தை இயக்குனர் கையில் எடுத்திருக்கிறார். இப்படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கூட ஹரிஷ் கல்யாண் பார்க்கிங் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை.... நடிகர் ஹரிஷ் கல்யாண்!

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சியில் உள்ள முக்கிய திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் பார்க்கிங் திரைப்படத்தை கண்டு களித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹரிஷ் கல்யாண், “சாதாரணமாக நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை தான் நாங்கள் படமாக எடுத்திருக்கிறோம். இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லா மனிதனுக்கும் ஈகோ இருக்கும். அதனை வெளிப்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றிய படம் தான் இது. மக்களிடையே இந்த படம் நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும். அனைவரும் இந்த படத்திற்கு உங்களின் அன்பையும் ஆதரவையும் தர வேண்டும்” என்று பார்க்கிங் படம் குறித்து பேசினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் இருந்து வேறு எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஹரிஷ் கல்யாண், “இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ