Homeசெய்திகள்சினிமாநடிகர் இளவரசு மகனுக்கு திருமணம்.. வாழ்த்திய பிரபலங்கள்....

நடிகர் இளவரசு மகனுக்கு திருமணம்.. வாழ்த்திய பிரபலங்கள்….

-

 தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் இளவரசு. இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களுக்கு ஔிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இதுவரை 13 திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கும் இளவரசுக்கு நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் நடிகராக உருவெடுத்தார். பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்திருக்கிறார்.

முத்துக்கு முத்தாக, அறை எண் 305-ல் கடவுள், லிங்கா, ஜன்னல் ஓரம், தவமாய் தவமிருந்து , என்ஜிகே என அடுத்தடுத்து பல படங்களில் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடித்து மிரட்டியிருக்கிறார் நடிகர் இளவரசு. இது தவிர மெகா தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார்
இந்நிலையில், இவரது மகனுக்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் பிரபல நடிகர்கள் சிவகார்த்திகேயன் கார்த்தி, சமுத்திரக்கனி மற்றும் சீமான் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ