நடிகர் ஜெகன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கடவுள் பாதி மிருகம் பாதி எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். அதே சமயம் பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த ஜெகன் கடந்த 2009 ஆம் ஆண்டு கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சூர்யா, தமன்னா, பிரபு, அகஸ்தீப் சைக்ஹல் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஜெகனின் சிட்டிபாபு கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அயன் படத்தை தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படத்திலும் ஜெகனுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. மேலும் கோ, அம்புலி, நான் சிகப்பு மனிதன், அனேகன், பயமா இருக்கு உள்ளிட்ட பல படங்களில் ஜெகன் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகர் ஜெகன், “என் அம்மாவிற்கு அயன் படம் பிடிக்கவே இல்லை. ஏன்னா அதில் நான் இறந்து விடுகிறேன் என்ற காரணத்தால் என் அம்மாவிற்கு பிடிக்கவில்லை. ஆனால் பையா படம் மிகவும் பிடித்திருந்தது. சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. பையா படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரம் தான். ஆனால் அயன் அளவுக்கு பையா படத்தை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்” என்று தன் சினிமா அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
- Advertisement -